Shanmugan Murugavel / 2021 ஜூன் 07 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஒலி றொபின்ஸன் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் றொபின்ஸன் பதிந்த டுவீட்கள் தொடர்பான ஒழுக்க விசாரணை ஒன்றின் முடிவு வரும் வரையிலேயே இவ்வாறு றொபின்ஸன் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்தவகையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் றொபின்ஸன் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இனவாத, பாலியல் கருத்துக்களை பதின்ம வயதினர் ஒருவராக டுவிட்டரில் பதிந்தமையை ஒத்துக் கொண்டதையடுத்து, மன்னிப்பு ஒன்றை கடந்த புதன்கிழமை றொபின்ஸன் விடுத்திருந்தார்.
தனது அறிமுகத்தை கடந்த புதன்கிழமை றொபின்ஸன் மேற்கொண்டமையைத் தொடர்ந்தே குறித்த டுவீட்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026