Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அனா இவானோவிச், டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவரது உடல்நிலையைத் தொடர்ந்தே, இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
சேர்பியாவைச் சேர்ந்த இவருக்கு, தற்போது 29 வயதே ஆகிறது. 2008ஆம் ஆண்டில், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றதோடு, முதல்நிலையையும் பெற்றுக் கொண்டார். ஆனால், அதன் பின்னர் தனது ஃபோர்மை இழந்த அவர், காயங்களுக்கும் உள்ளானார். இந்நிலையிலேயே, தற்போது அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
தனது இந்த முடிவு, கடினமானதாக அமைந்ததாகத் தெரிவித்த அவர், தனது உயர்திறனை வெளிப்படுத்த முடியாது என்பதால் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago