Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 06 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஓராண்டில் முதற்தடவையாக, அவுஸ்திரேலியாவுக்காக, அவ்வணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் உபதலைவர் டேவிட் வோணர் ஆகியோர் இன்று விளையாடியிருந்தனர்.
பந்தைச் சேதப்படுத்தியமைக்கான ஓராண்டுத் தடைக்குப் பின்னராக, நியூசிலாந்துப் பதினொருவருக்கெதிரான பிறிஸ்பேணில் இடம்பெற்ற அவுஸ்திரேலியப் பதினொருவரின் பயிற்சிப் போட்டியிலேயே இரண்டு பேரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், உலகக் கிண்ணக் குழாமில் ஐவரையே கொண்டு காணப்பட்ட நியூசிலாந்து பதினொருவர் அணிக்கெதிரான குறித்த போட்டியில் மயிரிழையிலேயே அவுஸ்திரேலியப் பதினொருவர் அணி வென்றிருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து பதினொருவர் அணி, ஆரம்பத்திலேயே பற் கமின்ஸிடம் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களை இழந்தது. பின்னர், 77 (102), 60 (69) ஓட்டங்களைப் பெற்ற டொம் பிளன்டெல், வில் யங் இனிங்ஸை தூக்கிநிறுத்தியபோதும், 27.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்டு, பின்னர் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் நேதன் கூல்டர்நைல், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப்பிடம் 77 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து 46.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு, 219 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அணித்தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்டவீரருமான ஆரோன் பின்ஞ்சின் 52 (64), டேவிட் வோணரின் 39 (43) ஓட்டங்களோடு, 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும், பின்னர் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 43 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்டபோதும், இறுதி ஜோடியான ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், அடம் ஸாம்பா மூலம் 48.2 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago