Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 19 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது.
பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும்.
இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர் 26 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், டேர்ண்பக், ஒரு ஹட்ரிக் உட்பட 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும், அஸார் மஹ்மூத், 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சரே அணி, ஆரம்ப விக்கெட்டுகளின் பின்னர் குமார் சங்கக்கார, றோரி பேர்ண்ஸ் ஆகியோரின் 101 ஓட்ட இணைப்பாட்டம் காரணமாக பலமான நிலைக்குச் சென்ற போதிலும், அவ்வணி 143 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சங்கக்கார ஆட்டமிழக்க, மிகுதி 7 விக்கெட்டுக்களையும் வெறுமனவே 71 ஓட்டங்களுக்குப் பறிகொடுத்து தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்காரா 60, றோரி பேர்ன்ஸ் 56, சாம் கியூரான் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் குளொசெஸ்டெயர்ஷையர் அணி சார்பாக ஜக் டெய்லர் 3, ஜேம்ஸ் புல்லர், டொம் ஸ்மித், டேவிட் பைன் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக ஜக் டெய்லர் தெரிவானார்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026