2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கோப்பா டெல் ரே கிண்ணம்: றியல், அத்லெட்டிகோ வென்றன

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 01 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் கோப்பா டெல் ரே கிண்ணத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டிகளில், றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், பார்சிலோனா-ஹெகுலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

றியல் மட்ரிட், கல்ச்சரல் லியோனோசா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற றியல் மட்ரிட், இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியில், றியல் மட்ரிட் அறிமுகத்தை மேற்கொண்ட றியல் மட்ரிட் முகாமையாளர் ஸினேடி ஸிடானின் மகன் என்ஸோவும் கோலொன்றினைப் பெற்றிருந்தார்.

அத்லெட்டிகோ மட்ரிட் தனது முதலாவது சுற்று இறுதி 32 அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-0 என்ற குய்ஜூல்லோ அணியைத் தோற்கடித்தது. அத்லெட்டிகோ சார்பாக யனிக் கராஸ்கோ இரண்டு கோல்களைப் பெற்றார்.

பார்சிலோனா, ஹெகுலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று இறுதி 32 அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கோப்பா டெல் ரேயின் தற்போதைய சம்பியன்கள் பார்சிலோனா என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .