2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கலக்கினார் றபடா; வென்றது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 07 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இளம் வீரரான கஜிஸ்கோ றபடாவின் அபராமான பந்துவீச்சின் உதவியுடன், தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி கிடைத்தது.

539 என்ற, இலகுவாக அடைய முடியாத இலக்குடன், 4 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களுடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 361 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 177 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கஜிஸ்கோ றபடா, தனது 4ஆவது 5 விக்கெட் பெறுதியைக் கைப்பற்றி, அணியின் முக்கிய பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். அவரே, இப்போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

 

ஸ்கோர் விவரம்:
தென்னாபிரிக்கா: 242/10 (துடுப்பாட்டம்: குயின்டன் டீ கொக் 84, தெம்பா பவுமா 51, ஃபப் டு பிளெஸிஸ் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்சல் ஸ்டார்க் 4/71, ஜொஷ் ஹேஸல்வூட் 3/70, நேதன் லையன் 2/38)

அவுஸ்திரேலியா: 244/10 (டேவிட் வோணர் 97, ஷோன் மார்ஷ் 63 ஓட்டங்கள். பந்துவீச்சு: வேர்ணன் பிலாந்தர் 4/56, கேஷவ் மஹராஜ் 3/56, கஜிஸ்கோ றபடா 2/78)

தென்னாபிரிக்கா: 540/8 (துடுப்பாட்டம்: ஜேபி.டுமினி 141, டீன் எல்கார் 127, வேர்ணன் பிலாந்தர் 73, குயின்டன் டீ கொக் 64, கேஷவ் மஹராஜ் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: பீற்றர் சிடில் 2/62, மிற்சல் மார்ஷ் 2/77, ஜொஷ் ஹேஸல்வூட் 2/107)

அவுஸ்திரேலியா: 361/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 97, பீற்றர் நெவில் ஆட்டமிழக்காமல் 60, டேவிட் வோணர் 35, ஸ்டீவன் ஸ்மித் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: கஜிஸ்கோ றபடா 5/92)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .