Shanmugan Murugavel / 2016 நவம்பர் 22 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக, கழகங்களை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எனினும், மாகாணமட்ட முதற்தரப் போட்டிகளைக் கொண்ட தொடரொன்றும் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
முதற்தரப் போட்டிகளில் விளையாடும் 14 கழகங்களுக்கும், தலா 11 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளதோடு, வசதிகளையும் அதிகரிக்கவுள்ளது. பந்துவீச்சு இயந்திரங்கள், இயந்திரப்படுத்தப்பட்ட உருளைகள், மைதானப் பராமரிப்புக்கான ஏனைய உபகரணங்கள் ஆகியன, இவ்வாறு வழங்கப்படவுள்ளன. பிரிவு 'பி' கழகங்கள், இலங்யைில் 10 காணப்படும் நிலையில், அவற்றுக்குத் தலா 9 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
"எங்கள் நாட்டில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும், நிலைக்க வைக்கும், அபிவிருத்தி செய்யும் இடங்களாக, கழகங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பகுதியில், எங்களால் முடியுமானளவு நாங்கள் முதலிடுவோம்" என, கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டார். சில வாரங்களுக்கு முன்னர், கழகமட்ட வீரர்கள் 85 பேருக்கு, உள்ளூர் ஒப்பந்தங்களை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையின் உள்ளூர் மட்டப் போட்டிகளில், கழகங்களின் தரம் போதாது என்பதால், மாகாணமட்டப் போட்டிகளை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதோடு, அதற்கான திட்டங்களையும், முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன தீட்டியிருந்தார். ஆனால், கழகமட்டப் போட்டிகளிலிருந்து விலகிச் செல்வதற்கு, கிரிக்கெட் சபை தயாராக இல்லை என்பதையே, கிரிக்கெட் சபையின் இந்த அறிவிப்புப் புலப்படுத்துகிறது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago