2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கவாஜா சதம்: முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலெய்ட்டில் நேற்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், ஆறு விக்கெட்டுகழையிழந்து 307 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, தென்னாபிரிக்க அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 48 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது.

தற்போது களத்தில், உஸ்மான் கவாஜா 138 ஓட்டங்களுடனும் மிற்சல் ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 59 ஓட்டங்களுடனும் அறிமுக வீரர் பீற்றர் ஹான்ட்ஸ்‌கொம்ப் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, கைல் அபொட் மூன்று விக்கெட்டுகளையும் கஜிஸ்கோ றபடா, வேர்ணன் பிளாந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முன்னர், தமது முதலாவது இனிங்ஸில், அணித்தலைவர் டு பிளெஸியின் ஆட்டமிழக்காத 118 ஓட்டங்களோடு, ஒன்பது விக்கெட்டுகழையிழந்து 259 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை தென்னாபிரிக்க அணி இடைநிறுத்தியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .