2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

காலிறுதியில் ஹலெப், மரே

Editorial   / 2017 ஜூன் 06 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று (05) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற, உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரே, உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், ஆறாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா ஆகியோர், காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளனர்.   

ஐக்கிய இராச்சியத்தின் மரே, 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில், ரஷ்யாவின் கரன் கச்சனோவை வென்றார்.

றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-1, 6-1 என்ற நேர் செட்களில், ஸ்பெய்னின் கர்லா சுவாரஸ் நவ்ரோவை வென்றார்.   

உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 4-6, 6-3, 7-5 என்ற செட்களில், குரோஷியாவின் பெற்ற மார்டிச்சை வென்றார்.   

இதேவேளை, நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், நடப்புச் சம்பியனும் உலகின் நான்காம் நிலை வீராங்கனையுமான கர்பினி முகுருஸா, 1-6, 6-3, 3-6 என்ற செட்களில், பிரான்ஸின் கிறிஸ்டினா மிலடினோவிச்சிடம் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.   

இந்நிலையில், நடப்புச் சம்பியனும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான, சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 7-6, 6-1, 6-3 என்ற நேர் செட்களில், ஸ்பெய்னின் அல்பேர்ட் றாமோஸ் வினோலஸை வென்று, காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.    

உலகின் ஆறாம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிஸ், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-7, 7-6, 4-6, 6-8 என்ற செட்களில், ஸ்பெய்னின் பவ்லோ கரென்யோ புஸ்டாவிடம் தோல்வியுற்று, தொடரிலிருந்து வெளியேறினார்.

உலகின் ஏழாம் நிலை வீரரான, ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்களில், ஆர்ஜென்டீனாவின் ஹொராசியோ செபயோஸை வென்று, காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .