Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 11 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (11) பிற்பகல் தெரிவித்தார்.
அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்து வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் உடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறான குறிப்பை தெரிவித்ததாக ஐ.சி.சி. அடுத்த செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதால், இலங்கையில் தடையை நீக்குவதற்கு ‘நிகழ்நிலை’ ஊடாக விசேட செயற்குழு கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த மாநாட்டை இலங்கை இழக்க நேரிடும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
6 hours ago
7 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
17 Aug 2025