2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா?

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில், வடகொரியா பங்குபற்றுவதற்கு உதவுமாறு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவிடம், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு பங்குபற்றினால், பிராந்தியத்தினதும் உலகினதும் அமைதிக்கு அது பங்களிக்குமென அவர் தெரிவித்தார்.

அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தென்கொரியாவில் இடம்பெறவுள்ள நிலையிலேயே, இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிரும் புதிருமாக உள்ள இந்த இரண்டு நாடுகளும், ஒன்றாக இணைந்து, ஒரே அணியில் பங்குபற்ற வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டாலும் கூட, வடகொரிய வீரர்கள் பங்குபற்றுவார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏனெனில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு, எந்தவொரு வடகொரிய வீரரும், இதுவரை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .