2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிங்கப்பூர் கிரான்ட்பீரிக்ஸில் வெட்டல் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சம்பியனான மெர்சிடஸ் அணியின் பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன், இந்தப் பருவகாலத்தில் முதலாவது தடவையாக பந்தயத்தின் இடைநடுவில் விலகியதையடுத்து, பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியான் வெட்டல் சிங்கப்பூர் கிரான்ட்பீரிக்ஸை வெற்றி கொண்டுள்ளார்.

பந்தயத்தின் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த வெட்டல், இரண்டு தடவைகள் பாதுகாப்பு கார் நுழைவு நேரத்தில், தனது அதிகப்படியான இடைவெளியை இழந்திருந்தாலும், நான்காவது தடவையாக சிங்கப்பூர் கிரான்ட்பீரிக்ஸை கைப்பற்றினார்.

இந்த வெற்றியுடன், இந்தப் பருவகாலத்தில் மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ள வெட்டல், தரப்படுத்தலில் 203 புள்ளிகளுடன் மூன்றாமிடம் வகிக்கின்றார். இதேவேளை தனது வாழ்க்கையில் 42வது பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ள வெட்டல், மூன்றாமிடத்திலிருந்த அயிர்த்தோன் சென்னாவை முந்தினார். மைக்கல் ஷூமாக்கர் 91 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

61 சுற்றுக்கள் கொண்ட பந்தயத்தின் அரைவாசி வரை நான்காமிடத்தில் இருந்த ஹமில்டன், அவரது இயந்திரத்தின் வலு குறைவடைந்தமையைத் தொடர்ந்து மேலும் பின்னோக்கி சென்றதைத் தொடர்ந்து பந்தயத்திலிருந்து விலகியிருந்தார்.

பந்தயத்தின் இரண்டாமிடத்தை ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியரான டேனியல் ரிக்கார்டோ பெற்றதோடு, வெட்டலின் சக பெராரி அணி வீரரான கிம் ரைக்கோணன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். நான்காமிடத்தை பெற்ற மெர்சிடஸ் அணியின் நிக்கோ ரோஸ்பேர்க், தனக்கும், ஹமில்டனுக்குமிடையிலான புள்ளி வித்தியாசத்தை 41ஆக குறைத்துக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .