2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சீன பகிரங்க டென்னிஸ்: சம்பியனாகினர் மரே, ரட்வன்ஸ்கா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவந்த சீன பகிரங்க டென்னிஸ் சுற்றுத் தொடரில் ஆண்கள் பிரிவின் சம்பியனாக அன்டி மரேயும் பெண்கள் பிரிவின் சம்பியனாக அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவும் தெரிவாகினர்.

ஆண்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயும் 18ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகொர் டிமிட்ரோவும் மோதினர்.

இதில், முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அன்டி மரே, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றார். இது, இவ்வாண்டில் அவர் பெறும் 5ஆவது பட்டமென்பதோடு, அவரது வாழ்வில் பெறும் 40ஆவது பதக்கமாகும்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, உலகின் முதல்நிலை வீரர் என்ற நிலையைப் பிடிப்பதற்கான வாய்ப்பு, மரேக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் சிறப்பான பெறுபேறுகளை அவர் வெளிப்படுத்துவாராயின், முதலிடத்தைப் பெறும் வாய்ப்பு, அவருக்கு உண்டு.

மறுபக்கத்தில், பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளின் இறுதிப் போட்டியில், 3ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவும் 9ஆம் நிலை வீராங்கனையான ஜொன்னா கொன்டோவும் மோதினர்.

இப்போட்டியில் முதலாவது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய ரட்வன்ஸ்கா, இரண்டாவது செட்டைப் போராடி, 7-6 (6-2) என வென்று, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்தப் பட்டம், ரட்வன்ஸ்காவின் 20ஆவது பட்டமாகும். தோல்வியடைந்த போதிலும், போதுமான புள்ளிகளைப் பெற்ற கொன்டா, 14ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .