Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலன்டினோ ரோசி, மோட்டோஜிபியில் யமகா அணி வீரரான ஜோர்ஜ் லொறின்ஸோவுக்கு எதிரான புள்ளி வித்தியாசத்தை 23 ஆக அதிகரித்துக்கொண்ட போதும், அவரது உத்தித் தவறினால் இப்போட்டியில் ஸ்பெயினின் மார்க் மார்க்கஸ் வெற்றி பெற்றுள்ளார்.
கிழக்கு இத்தாலியிலுள்ள மிசானோவிலுள்ள மார்க்கோ சிமோன்செல்லியில் உள்ள அரங்கிலுள்ள, சாதனை எண்ணிக்கையான 92,000 பேர் தமது நாட்டு ரோசிக்கு ஆதரவளித்திருந்த நிலையில், அவர் முன்னணியில் இருந்த போதும், ஈரமாக, உலர்ந்து இருந்த திடலில் இரண்டு தடவைகள் நிறுத்தியதன் காரணமாக அவர் மூன்றாமிடத்தையே பெற்றார்.
மார்க்கசினுடைய ஹொண்டா அணி, பத்து சுற்றுக்கள் இருந்த நிலையில் மோட்டார்சைக்கிளை மாற்றிய நிலையில், ரோசி, லொரேன்சோ இருவரும் தொடர்ந்தும் தமது பழைய மோட்டார் சைக்கிள்களுடனேயே தொடர்ந்திருந்தனர்.
இன்னும் 5 சுற்றுக்கள் இருக்கின்ற நிலையில் ரோசி 247 புள்ளிகளுடனும், லொரேன்சோ 224 புள்ளிகளுடனும், மாக்கஸ் 184 புள்ளிகளுடனும் உள்ளனர்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026