2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

செரினா வில்லியம்ஸுக்கு அதிர்ச்சித் தோல்வி

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 04 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் ஒக்லன்ட் கிளாஸிக் டென்னிஸ் தொடரில், முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அதிர்ச்சித் தோல்வியடைந்து, இரண்டாவது சுற்றுடன் வெளியேறினார்.

இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், சக அமெரிக்க வீராங்கனையான 72ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள மடிசன் பிரெங்கிளை, 2ஆம் நிலையிலுள்ள செரினா எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய செரினா, 4-1 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால், சிறப்பான மீள்வருகையைப் புரிந்த பிரேங்கிள், 6-4 என அந்த செட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம், செரினாவுக்கு மேலதிக புள்ளிகளை வழங்காது, 5 புள்ளிகளை அவர் தொடர்ச்சியாகக் கைப்பற்றியிருந்தார்.

இரண்டாவது செட்டில், 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் பிரெங்கிள் முன்னிலை வகித்த போதிலும், 6-6 என்ற நிலைமையை, செரினா ஏற்படுத்தினார். தொடர்ந்து, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் செரினா வெற்றிபெற்றார்.

தீர்க்கமானதான மூன்றாவது செட்டில், இருவரும் கடுமையாகப் போராடிய போதிலும், 6-4 என்ற புள்ளிகள் கணக்கில், பிரெங்கிள் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதற்கு முன்னர் இருவரும், 2015ஆம் ஆண்டிலேயே சந்தித்திருந்தனர். அந்தப் போட்டியில், 6-0, 6-1 என்ற செட் கணக்கில், செரினா வில்லியம்ஸ் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .