Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமல், அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் ஹசங்க குருசிங்க ஆகியோருக்கு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடரில் நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, தினேஷ் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு, இலங்கை அணி வீரர்கள் 2 மணித்தியாலங்கள் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்ற மற்றுமொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்காற்றுக் குழு காணொளி ஊடாக குறித்த மூவரிடமும் விசாரணை நடத்தியது.
இரு தரப்பும் தமது சட்டத்தரணிகளுடன் விசாரணையில் பங்கேற்றனர். சுமார் ஆறு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த விசாரணையின்போது மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதற்கமைய மூவருக்கும் நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025