Shanmugan Murugavel / 2016 நவம்பர் 20 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்காக றியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பூப்பந்தாட்ட வீராங்கனையான பி.வி.சிந்து, சீன பகிரங்க பூப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் சீனாவின் சுன் யு-ஐ நேற்று எதிர்கொண்ட சிந்து, 21-11, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியன் பட்டம் வென்றார்.
றியோ பதக்கத்துக்குப் பின்னர் அவர் பங்குபற்றிய 3ஆவது தொடர் இதுவாகும். இதற்கு முன்னைய டென்மார்க், பிரெஞ்சு பகிரங்க தொடர்களில் அவர் இரண்டாம் சுற்றில் தோல்விகளைத் தழுவியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .