Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளின் "ஏ" அணிகளும் அவுஸ்திரேலியாவின் தேசிய செயற்றிறன் குழாம் அணியும் பங்குபற்றிய ஒருநாள் தொடரின் சம்பியன்களாக, இந்திய "ஏ" அணி தெரிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய "ஏ" அணியை எதிர்கொண்ட இந்திய "ஏ" அணி, 57 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய "ஏ" அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது. மந்தீப் சிங் (95 (108), மனிஷ் பாண்டே 61 (71), ஷ்ரேயாஸ் ஐயர் 41 (64) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் ட்ரெமெய்ன், டானியல் வொரல், ஜோ மெனி, மார்க்ஸ் ஸ்டொனிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
267 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய "ஏ" அணி, 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில், ஒரு விக்கெட்டை இழந்து 81 ஓட்டங்களுடனும் பின்னர் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களுடனும் அவ்வணி காணப்பட்ட போதிலும், பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
துடுப்பாட்டத்தில் பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப் 43 (59), அலெக்ஸ் றொஸ் 34 (31), கமரொன் பாங்க்றொப்ட் 34 (65), நிக் மடின்சன் 31 (54), ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் யஸ்வேந்த்ரா சஹால் 4 விக்கெட்டுகளையும் தவால் குல்கர்ணி, கருண் நாயர், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, மந்தீப் சிங் தெரிவானார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026