2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சமநிலையில் முடிவடைந்த ஸ்பெய்ன், இத்தாலி‌க்கிடையேயான போட்டி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன், இத்தாலி அணிகளுக்கிடையே இடம்பெற்ற உலகக் கிண்ண தகுததிகாண் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையிலேயே போட்டி சமநிலையில் முடிவடைந்ததிருந்தது.

போட்டியின் முதற்பாதியில், 72.4 சதவீதம், ஸ்பெய்னே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் கோலெதனையும் பெறவில்லை. இத்தாலியின் கோல் காப்பாளர் ஜயுலுஜி புபான் விட்ட தவறினைப் பயன்படுத்திய விடொலோ கோலைப் பெற, ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது.

எனினும், இத்தாலியின் ஈடர், சேர்ஜியோ றாமோஸினால் தவறாகக் கையாளப்பட, வழங்கப்பட்ட பெனால்டியை டீ றொஸி கோலாக்க, தகுதிப் போட்டிகளில், தோல்வியடையாத தமது போட்டிகளின் எண்ணிக்கையை 52 ஆக உயர்த்திக் கொண்டது. இறுதியாக, 2006ஆம் ஆண்டு, பிரான்ஸிதாமே தோல்வியுற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .