Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில், ராவல்பின்டியில் திங்கட்கிழமை (20) ஆரம்பித்து இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டை தென்னாபிரிக்கா வென்ற நிலையிலேயே தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 333/10 (துடுப்பாட்டம்: ஷண் மசூட் 87, செளட் ஷகீல் 66, அப்துல்லா ஷஃபிக் 57, சல்மான் அக்ஹா 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 7/102, சைமன் ஹாமர் 2/75, ககிஸோ றபாடா 1/60)
தென்னாபிரிக்கா: 404/10 (துடுப்பாட்டம்: செனுரன் முத்துசாமி ஆ.இ 89, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 76, ககிஸோ றபாடா 71, டொனி டி ஸொர்ஸி 55, ஏய்டன் மார்க்ரம் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆசிஃப் அஃப்ரிடி 6/79, நொமன் அலி 2/92, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/95, சஜிட் கான் 1/119)
பாகிஸ்தான்: 138/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 50, சல்மான் அக்ஹா 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: சைமன் ஹாமர் 6/50, கேஷவ் மஹராஜ் 2/34, ககிஸோ றபாடா 1/38)
தென்னாபிரிக்கா: 73/2 (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 42, றயான் றிக்கெல்டன் ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: நொமன் அலி 2/40)
போட்டியின் நாயகன்: கேஷவ் மஹராஜ்
தொடரின் நாயகன்: செனுரன் முத்துசாமி
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026