Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 30 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அஸ்பன்யோலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியது.
அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சீஸர் அத்பிலிகெட்டா பெற்றதோடு, அஸ்பன்யோல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜவி புவாடோ பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் தலா 63 புள்ளிகளுடன் பார்சிலோனாவும், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும் உள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி முதலாமிடத்தில் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டுமுள்ளன. 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 52 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவுமுள்ளன. இதில் பார்சிலோனாவும், பில்பாவோவும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
38 minute ago
2 hours ago
3 hours ago