Shanmugan Murugavel / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற செல்சியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை டிஜ்ஜனி றெய்ஜின்டர்ஸ் பெற்ற நிலையில், செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை என்ஸோ பெர்ணாண்டஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் புல்ஹாமின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் சமப்படுத்தியிருந்தது. லிவர்பூல் சார்பாக புளோரியன் ரிட்ஸ், கோடி கக்போ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். புல்ஹாம் சார்பாக, ஹரி வில்சன், ஹரிஸன் றீட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago