Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
சிற்றி சார்பாக எர்லிங்க் ஹலான்ட், றிக்கோ லூயிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பலஸ் சார்பாக டேனியல் முனோஸ், மக்ஸென்ஸ் லக்குறொய்க்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது. யுனைட்டெட் சார்பாக றஸ்மஸ் ஹொஜ்லுன்ட், புரூனோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரெஸ்ட் சார்பாக நிகொலா மிலெங்கோவிச், மோர்கன் கிப்ஸ்-வைட், கிறிஸ் வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026