Shanmugan Murugavel / 2022 ஜனவரி 03 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணிக்கும், லிவர்பூலுக்கும் இடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
செல்சி சார்பாக, மட்டியோ கொவாசிச், கிறிஸ்டியன் புலிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்னர்.
இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் வென்றது. எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அந்தோனி கொர்டன் பெற்றதோடு, பிறைட்டன் சார்பாக அலெக்ஸிஸ் மக் அலிஸ்டர் இரண்டு கோல்களையும், டான் பேர்ண் ஒரு கோலையும் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி காணப்படுவதுடன், 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் செல்சி காணப்படுகின்றது. ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள லிவர்பூலும், ஆர்சனலும் முறையே 42, 35 புள்ளிகளுடன் மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன.
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026