Shanmugan Murugavel / 2024 நவம்பர் 20 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், தமது நாட்டில் புதன்கிழமை (20) நடைபெற்ற நெதர்லாந்துடனான குழு சி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியா சமப்படுத்தியது.
பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியா சார்பாகப் பெறப்பட்ட கோலை எர்மெடின் டெமிரோவிச் பெற்றதோடு, நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை பிரயன் பிரோபி பெற்றிருந்தார்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற ஜேர்மனியுடனான குழு சி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி சமப்படுத்தியது. ஜேர்மனி சார்பாக பேலிக்ஸ் மெச்சா பெற்றதோடு, ஹங்கேரி சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் ஸோபோஸ்லாய் பெறப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தம்நாட்டில் நடைபெற்ற துருக்கியுடனான குழு எச் போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் மொன்ரனீக்ரோ வென்றது.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026