Shanmugan Murugavel / 2025 மே 04 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா
தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற
பயேர்ண் மியூனிச்சுடனான போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில்
ஆர்.பி லெய்ப்ஸிக் சமப்படுத்தியது.
மியூனிச் சார்பாக எரிக் டயன், மிஷெல் ஒலிஸே, லெரோய் சனே
ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெய்ப்ஸிக் சார்பாக,
பெஞ்சமின் செஸ்கோ, லூகா குளொஸ்டெர்மன், யூசுஃப் பெளல்சன்
ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 76 புள்ளிகளுடன்
முதலாமிடத்தில் மியூனிச் உள்ளது. 67 புள்ளிகளுடன்
இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசனும், 55
புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்பேர்ட்டும், 51
புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொரூசியா டொட்டமுண்டும்
காணப்படுகின்றன. இதில் மியூனிச்சும், டொட்டமுண்டும் ஒரு போட்டி
அதிகமாக விளையாடியுள்ளன.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago