2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமநிலையில் யுனைட்டெட் - வில்லா போட்டி

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்டன் வில்லாவின் மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவ்வணிக்கும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. 

யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ப்ரூனோ பெர்ணான்டஸ் பெற்றதோடு, வில்லா சார்பாக ஜேக்கப் றம்சி, பிலிப் கோச்சினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். 

இதேவேளை, நோர்விச் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது. எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றதோடு, நோர்விச் சார்பாக அடம் இடாஹ் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணையுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை கெவின் டி ப்ரூனே பெற்றிருந்தார். 

அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி உள்ளதோடு, இரண்டாமிடத்தில் 43 புள்ளிகளுடன் செல்சி உள்ளதுடன், இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடிய லிவர்வூல் 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுள்ளது. ஒரு போட்டி குறைவாக விளையாடிய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் 37 புள்ளிகளுடன் நான்காமிடத்திலுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .