Shanmugan Murugavel / 2021 ஜனவரி 11 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், றோமாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், இன்டர் மிலனுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இன்டர் மிலன் சார்பாக, மிலான் ஸ்கிறினியர், அஷ்ரஃப் ஹக்கிமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றோமா சார்பாக, லொரென்ஸோ பெல்லகிரினி, ஜியலுக்கா மன்சினி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஏ.சி மிலன் காணப்படுகின்றது. 37 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டர் மிலனும், 34 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றோமாவும், 33 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன. இதில், ஏனைய அணிகளை விட ஜுவென்டஸ் ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026