Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவந்த பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் சம்பியனானார்.

நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் 10 நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸை வென்றே சிமோனா ஹலெப் சம்பியனாகியிருந்தார்.
குறித்த போட்டியில் முதலாவது செட்டில் 6-3 என்ற செட் கணக்கில் சொலனி ஸ்டீபன்ஸ் வென்றிருந்தபோதும், அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற சிமோனா ஹலெப் சம்பியனாகியிருந்தார்.
அந்தவகையில், 2014ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிடமும் கடந்தாண்டு பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இலத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோவிடமும் இவ்வாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வொஸ்னியாக்கியிடமும் தோல்வியுற்றிருந்த சிமோனா ஹலெப், இம்முறை பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் சம்பியனானதன் மூலம் தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026