Editorial / 2019 ஒக்டோபர் 04 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான குழு எஃப் போட்டியொன்றை 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் பெற்றார். இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பெல்ஜியக் கழகமான ஜெங்க்கின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி முடித்திருந்தது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்குடனான குழு ஈ போட்டியொன்றில் 4-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் வென்றிருந்தது. இங்கிலாந்து பீறீமியர் லீக் கழகமான லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா இரண்டு கோல்களையும், சாடியோ மனே, அன்றூ றொபெர்ட்ஸன் ஒரு கோலையும் பெற்றனர். றெட் புல் சல்ஸ்பேர்க் சார்பாக, ஹுவாங் ஹீ-சான், தகுமி மினமினோ, எர்லிங் பிறோட் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸ் வென்றது. அஜக்ஸ் சார்பாக, ஹகிம் ஸியெச், குயின்ஸி ப்றோமெஸ், டொனி வான் டீ பீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் வென்றது. லயோன் சார்பாக, மெம்பிஸ் டிபெ, மார்டின் டெரியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 2-1 என்ற் கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம், வில்லியன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, செக் குடியரசுக் கழகமான ஸ்லாவியா பிராக்கின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வென்றிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அஷ்ரஃப் ஹக்கிமி பெற்றிருந்தார்.
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026