Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மைதானத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
ஜுவென்டஸ் சார்பாக டுஸன் விளாகோவிச், வெஸ்டன் மக்கென்னி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக பெரன் டொரஸ் இரண்டு கோல்களையும், றபீனியா ஒரு கோலையும் பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் செர்ஹெள குய்ரஸி பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026