Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.
ஸ்பானிய லா லிகா கழகமான மட்ரிட் சார்பில் வின்ஷியஸ் ஜூனியர் மூன்று கோல்களைப் பெற்றதோடு, அந்தோனியோ ருடிகர், லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டமுண்ட் சார்பாக டொன்யெல் மலென், ஜேமி பினோ ஜிட்டென்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டுடனான போட்டியில் அவ்வணியின் எல் பிலால் தோரே பெற்ற கோலால் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் தோற்றது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சமப்படுத்தியது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்ரஃப் ஹகிமி பெற்றதோடு, ஐந்தோவன் சார்பாகப் பெறப்பட்ட கோலை நோவா லங் பெற்றிருந்தார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago