Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 24 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது.
பார்சிலோனா சார்பாக அணித்தலைவர் றபினீயா மூன்று கோல்களையும், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும் பெற்றதோடு, மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது. அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூலியன் அல்வரேஸ் பெற்றதோடு, லில்லி சார்பாக ஜொனதன் டேவிட் இரண்டு கோல்களையும், எடொன் ஸெக்ரோவா ஒரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில் இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் டர்வின் நுனேஸ் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago