Mithuna / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே லீக்கிலிருந்து யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது. மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிங்ஸ்லி கோமன் பெற்றிருந்தார்.
இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் சொஸைடட்டுக்குமிடையிலான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியிருந்தது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026