Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங்கின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை பில் பொடென் பெற்றதோடு, ஸ்போர்டிங் சார்பாக விக்டர் யோக்கெரஸ் மூன்று கோல்களைப் பெற்றதோடு, மக்ஸிமில்லியானோ அரகோ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது. ஸ்பானிய லா லிகா கழகமான மட்ரிட் சாப்ராக வின்ஷியஸ் ஜூனியர் ஒரு கோலைப் பெற்றார். மிலன் சார்பாக மலிக் ஜாஃவ், அல்வரோ மொராட்டா, டிஜ்ஜனி றெஜின்டர்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனியக் கழகமான பயெர் லெவர்குசனுடனான போட்டியில் லூயிஸ் டியஸின் மூன்று கோல்கள், கோடி கக்போவின் ஒரு கோலோடு 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
இதேவேளை பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
17 minute ago