2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சிம்பாப்வேயை வென்ற இலங்கை

Mithuna   / 2024 ஜனவரி 09 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வேயின் அணித்தலைவர் கிரேய்க் எர்வின் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வேக்காக எர்வின் 82 (102), றயான் பேர்ள் 31 (37), ஜொய்லோர்ட் கும்பி 30 (37), மில்டன் ஷும்பா 26 (45) ஓட்டங்களைப் பெற்றபோதும், டில்ஷான் மதுஷங்க, மகேஷ் தீக்‌ஷன (4), துஷ்மந்த சமீரவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, றிச்சர்ட் நகரவா (5), சிகண்டர் ராசா (2), பிளஸிங்க் முஸர்பனியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் ஜனித் லியனகேயின் 95 (127), ஜெஃப்ரி வன்டர்சேயின் ஆட்டமிழக்காத 19 (18), துஷ்மந்த சமீரவின் ஆட்டமிழக்காத 18 (25) ஓட்டங்களோடு 49 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக லியனகே தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .