Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான ஹரி கேனைக் கைச்சாத்திடுவதற்கான இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கோரிக்கைகளை தொடர்ந்தும் டொட்டென்ஹாம் நிராகரித்து வரும் நிலையிலும் அதை சிற்றி தொடருகின்றது.
வீரர்களை பரிமாறுவதற்கான காலக்கெடுவானது இம்மாதம் 31ஆம் திகதி முடிவடைகையில், இரண்டு வாரங்களுக்கிடையில் ஒப்பந்தத்தை சிற்றி பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
டொட்டென்ஹாமுடன் மூன்றாண்டுகளுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்ற கேனை 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு டொட்டென்ஹாம் மதிப்பிட்ட நிலையில், 120 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் வரையிலேயே அதிகபட்சமாக சிற்றி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago