Shanmugan Murugavel / 2024 நவம்பர் 24 , பி.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
டொட்டென்ஹாம் சார்பாக ஜேம்ஸ் மடின்ஸன் இரண்டு கோல்களையும், பெட்ரோ பொரோரோ, பிரென்னன் ஜோன்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக நிக்கொலஸ் ஜக்சன், என்ஸோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்டான் அயூ பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற பிரென்ஃபோர்ட்டுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026