Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவுக்கு முன்களவீரரான தம்மி ஏப்ரஹாம் நகர்ந்துள்ளார்.
முன்னாள் செல்சி முகாமையாளரான ஜொஸே மொரின்யோ முகாமையாளராக இருக்கும் றோமாவில் 40 மில்லியன் யூரோக்களுக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றிலேயே 23 வயதான ஏப்ரஹாம் இணைந்துள்ளார்.
இந்நிலையில், இவ்வொப்பந்தமானது 68 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு ஏப்ரஹாமை செல்சி மீண்டும் வாங்கும் தெரிவையும் உள்ளடக்கியுள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், றோமாவில் இரண்டு பருவகாலங்களை ஏப்ரஹாம் முடிக்கும் வரையில் அவரை செல்சி மீண்டும் வாங்க முடியாது.
செல்சிக்காக 82 போட்டிகளில் 30 கோல்களைப் பெற்ற ஏப்ரஹாம், கடந்த பருவகாலத்தில் அதிகபட்சமாக 12 கோல்களைப் பெற்றிருந்தார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago