Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 10 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செளதாம்டனின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இப்போட்டியில், தமது மத்தியகள வீரர் கிறிஸ்டியனின் எரிக்சனின் பிறீ கிக்கொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், 26ஆவது நிமிடத்தில் சக மத்தியகள வீரர் டெலே அல்லியின் பங்களிப்புடன் கோலொன்றை தமது முன்கள வீரர் ஹரி கேன் பெற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முன்னிலை பெற்றது.
முதற்பாதியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அப்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி முன்னிலை பெற்றிருந்தது.
எவ்வாறெனினும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் பின்கள வீரரான டனி றோஸின் தவறைப் பயன்படுத்தி 76ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற செளதாம்டனின் பின்கள வீரரான யன் வலெரி, கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதுடன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலான பிறீ கிக்கிலிருந்து செளதாம்டனின் மத்தியகள வீரர் ஜேம்ஸ் வோர்ட் புரோஸ் கோலைப் பெற்றதோடு, இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் செளதாம்டன் வென்றது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வட்பேர்ட்டுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி வென்றனர். மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் ரஹீம் ஸ்டேர்லிங் பெற்றதோடு, வட்பேர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெராட் டெலுபே பெற்றிருந்தார்.
அந்தவகையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், தமக்கும் இரண்டாமிடத்திலிருக்கும் லிவர்பூலுக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை நான்காக மன்செஸ்டர் சிற்றி அதிகரித்துள்ளது.
இதேவேளை, தற்போது மூன்றாமிடத்தில் டொட்டென்ஹாம் காணப்படுகின்றபோதும், டொட்டென்ஹாமை முந்தக் கூடிய வாய்ப்பை செல்சி கொண்டிருப்பதுடன், டொட்டென்ஹாமின் புள்ளிகளைச் சமப்படுத்தக்கூடிய வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட் கொண்டிருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025