Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடிக்க 37 பந்துகளை எடுத்துக்கொண்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே சிக்சருடன் கோலி அதிரடியைத் தொடங்கினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் பில் சால்ட்டின் அதிரடியே ஓங்கியிருந்தது.
பில் சால்ட், மிட்செல் சான்ட்னர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 23 ரன்களை விளாசினார். வெறும் 25 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த அவர், இறுதிவரை அதிரடி காட்டி 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
மறுபுறம், பவர் பிளே ஓவர்கள் முடிந்த பிறகு ரன்களைச் சேர்க்க விராட் கோலி தடுமாறினார். 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த அவர், அதன் பின்னரும் அதிரடிக்கு மாறாமல் அடுத்த 18 பந்துகளில் 25 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் 37 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை எட்டினார்.
இறுதியில் 38 பந்துகளில் 50 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 131 என்ற குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதை உணர்ந்த கோலி, தனது அரைசதத்தைக் கொண்டாடவில்லை.
வான்கடே போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில், விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் கோலி நிதானமாக ஆடியது அணியின் மொத்த ஸ்கோரைப் பாதித்துள்ளதாகக் கருதப்படுகிறது. பில் சால்ட் (78) மற்றும் ரஜத் பட்டிதார் (20 பந்துகளில் 53 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்திய போதும், கோலியின் மந்தமான ஆட்டம் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
"தொடக்க வீரராகக் களமிறங்குபவர் குறைந்தது 25 பந்துகளுக்குள் அரைசதத்தைக் கடந்தால் மட்டுமே அணி இமாலய இலக்கை எட்ட முடியும்" எனச் சுட்டிக்காட்டும் கிரிக்கெட் ரசிகர்கள், விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் குறித்து அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
34 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago