Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய குரான் பிறீயை நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன், மக்லரென் அணியின் லான்டோ நொரிஸிடமிருந்து போட்டியை எதிர்கொண்டபோதும் வென்றார்.
பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்ற நிலையில், அவரின் சக மக்லரென் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்து மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 62 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நொரிஸ் உள்ளார். 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனும், 49 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரியும் காணப்படுகின்றனர்.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago