Shanmugan Murugavel / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் தோற்றது.
இன்டர் மிலன் சார்பாக, அர்துரோ விடால், நிக்கொலோ பரெல்லா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, அத்லாண்டாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஜெனோவாவுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டிகள் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஏ.சி மிலன் காணப்படுகின்றது. இன்டர் மிலனும் 40 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாமிடத்திலுள்ளது. தவிர, ஏ.சி மிலனை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago