2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜோகோவிச், வோஸ்னியாக்கி வெற்றி

Mayu   / 2024 ஜனவரி 16 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முதல்சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றில் நுழைந்துள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நேற்று தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-2, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியா வீரர் டினோ பிரிஸ்மிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, போலந்து வீராங்கனை மக்டா லினெட்டுடன் மோதினார். இதில் வோஸ்னியாக்கி 6-2, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது லினெட் பாதியில் விலகினார். இதையடுத்து வோஸ்னியாக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .