Shanmugan Murugavel / 2016 நவம்பர் 24 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, 9 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களுடன் காணப்படும் போது, இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் ஃபப் டு பிளெஸி ஆட்டமிழக்காமல் 118, ஸ்டீவன் குக் 40, குயின்டன் டீ கொக் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட் 4 விக்கெட்டுகளையும் மிற்சல் ஸ்டார்க், ஜக்ஸன் பேர்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
12 ஓவர்கள் துடுப்பெடுத்தாட வேண்டியிருந்த நிலையில், உஸ்மான் கவாஜா, மற் றென்ஷோ இருவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமறங்கினர், தென்னாபிரிக்க அணியின் இனிங்ஸின் இறுதிக் கட்டத்தில், வழக்கமான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், மைதானத்துக்கு வெளியே காணப்பட்டதால், அவர் களமிறங்க அனுமதிக்கப்படவில்லை. 12 ஓவர்களில், தங்களது விக்கெட்டை இழக்காத அவுஸ்திரேலிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள், 14 ஓட்டங்களைப் பெற்றனர்.
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago