2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

டெய்லர் சதம்: பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 369 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் இடம்பெற்றுவருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு, 10 விக்கெட்டுகள் கைவசமிருக்கையில் நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 368 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

369 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற பாகிஸ்தான் அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில், விக்கெட்டு இழப்பின்றி ஓர் ஓட்டத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக, ஐந்து விக்கெட்டுகழையிழந்து 313 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸை நியூசிலாந்து இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 102, டொம் லேதம் 80, கேன் வில்லியம்ஸன் 42, கொலின் டி கிரான்ட்ஹொம் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி சார்பாக இம்ரான் கான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

பாபர் அஸாமின் 90 ஓட்டங்கள் துணையோடு தமது முதலாவது இனிங்ஸில் 216 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றிருந்தது. டிம் சௌதி ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். நியூசிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில் 271 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதில், ஜீட் றாவல் 55, பி.ஜெ.வட்லிங் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில், சொஹைல் கான் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .