2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

டேவிஸ் கிண்ணம்: ஆர்ஜென்டீனா வசமானது

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரோஷியாத் தலைநகர் ஸக்ரெப்பில் இடம்பெற்ற டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிகளில், 3-2 என்ற நிலையில் போராடி வெற்றி பெற்ற ஆர்ஜென்டீனா முதற்தடவையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது  

இறுதி நாளில் 2-1 என்ற முன்னிலையில் சென்ற குரோஷியா, ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவுக்கெதிரான போட்டியில் உலகின் ஆறாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் முதலிரண்டு செட்களையும் வென்றபோது, இரண்டாவது தடவையாக டேவிஸ் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நான்கு மணித்தியாலங்கள் 53 நிமிடங்கள் நீடித்த போட்டியில், எதிர்பாரவிதமாக மீள்வருகையை நிகழ்த்திய உலகின் 38ஆம் நிலை வீரரான டெல் போட்ரோ, 6-7(4-7), 2-6, 7-5, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2-2 என்ற சமநிலை முடிவை ஏற்படுத்தினார்.

அதன்பின்னர் தீர்க்கமான ஐந்தாவது போட்டியில், 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவோ கார்லோவிக்கை ஆர்ஜென்டீனாவின் பெடெரிக்கோ டெல்போனிஸ் வெல்ல, முதற்தடவையாக டேவிஸ் கிண்ணம் ஆர்ஜென்டீனா வசமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .