Freelancer / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது.
நீண்ட காலத்துக்குப் பின்னர் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி தொடருக்கான அணித்தேர்வில் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திரசிங் டோனி, உலகக் கிண்ணத்துக்கான அணியின் அறிவுரையாளராக இணைக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago