Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் சனிக்கிழமை (20) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக அலெக்ஸான்டர் இஸக், ஹியூகோ எகிடிகே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றார்.
இந்நிலையில் நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது. செல்சி சார்பாக றீஸ் ஜேம்ஸ், ஜோவா பெட்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் நிக் வொல்டமேட் பெற்றிருந்தார்.
இதேவேளை எவெர்ற்றனின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் விக்டர் ஜைகெரஸ் பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026