Shanmugan Murugavel / 2025 ஜனவரி 27 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிஸ்டர் சிற்றி வென்றது.
லிஸ்டர் சார்பாக ஜேமி வார்டி, பிலால் எல் கன்னூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 44 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றன. நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, நியூகாசில் யுனைட்டெட் ஆகியன தலா 41 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், ஐந்தாமிடத்தில் நியூகாசிலும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட லிவர்பூல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
19 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
38 minute ago